உருளைக்கிழங்கு அல்வா

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோஉருளைக்கிழங்கு
  2. 1/4 கிலோசீனி
  3. 150 கிராம்நெய்
  4. 10கிஸ்மிஸ்
  5. 10முந்திரிப் பருப்பு
  6. 1/2 டீஸ்பூன்ஏலக்காய் பொடி
  7. 1/2 கப்பால்
  8. 1 சிட்டிகைஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

  2. 2

    முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் நெய்யில் வறுத்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றவும்.

  4. 4

    பால் நன்றாகக் கொதித்ததும் சீனியை சேர்க்கவும்.சீனி கரைந்ததும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை பாலில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

  5. 5

    மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்றாகக் கிளறவும்.ஃபுட் கலர் சேர்க்கவும்.

  6. 6

    ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.

  7. 7

    தண்ணீர் வற்றி நெய் மேலே தெளிந்து வரும் போது வறுத்த முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் சேர்த்து நன்றாகக் கிளறி நெய் புரட்டிய தட்டில் கொட்டி பரத்தி, ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

  8. 8

    சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes