பருப்பு தோசை (Paruppu Dosai Recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பருப்பு தோசை (Paruppu Dosai Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பச்சரிசி
  2. 1/2 கப்இட்லி அரிசி
  3. 1 கப்கடலைப்பருப்பு
  4. 1/4 கப்துவரம் பருப்பு
  5. 1/4 கப்பாசிப்பருப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன்உளுந்து
  7. 1/4 டீஸ்பூன்வெந்தயம்
  8. 1 டேபிள் ஸ்பூன்சோம்பு -
  9. 5காய்ந்த மிளகாய்
  10. 2 பற்கள்பூண்டு
  11. 1/4 டீஸ்பூன்ஜீரகம்
  12. தேவையான அளவுஉப்பு
  13. தாளிக்க
  14. 1 டீஸ்பூன்கடுகு
  15. சிறிதுகறிவேப்பிலை
  16. 1/4 டீஸ்பூன்பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    உளுந்து மற்றும் வெந்தயத்தையும் ஊற வைக்கவும்.

  3. 3

    ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, ஜீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அதனுடன் அரிசியை நன்றாக அரைத்து சேர்க்கவும்.

  5. 5

    பிறகு உளுந்து மற்றும் வெந்தயத்தையும் அரைத்துச் சேர்க்கவும்.

  6. 6

    அத்துடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  7. 7

    தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை எடுத்து மெல்லிய தோசையாக ஊற்றவும்.

  8. 8

    சிவந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes