ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#இரவுஉணவு
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 300கிராம் உருளைக்கிழங்கு,
  2. தோசை மாவு,
  3. 1/2டீஸ்பூன் கடுகு,
  4. 1/2டீஸ்பூன் உளுத்தம்பருப்பு,
  5. 1டீஸ்பூன் கடலைபருப்பு,
  6. 1டீஸ்பூன் இஞ்சி,
  7. 1பெரிய வெங்காயம் வெட்டியது,
  8. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்,
  9. பெருங்காயம்,
  10. தேவையான அளவு உப்பு, எண்ணெய், நெய்
  11. 1/2கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலாக உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை ஆறவைத்து நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1/2 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, 1டீஸ்பூன் கடலைப்பருப்பு, 1டீஸ்பூன் இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த ஒரு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறு பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு மசித்து வைத்த உருளைக்கிழங்கை இதனுடன் சேருங்கள். கூடவே 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை மசாலாவை வேகவைக்கவும்.

  4. 4

    கடைசியாக ஒரு தோசை கல்லில், தோசை மாவு ஊற்றி 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, உருளை மசாலை மேலே தடவவும். சுவையான மசாலா நெய் ரோஸ்ட் பரிமாற தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes