மட்டன் சிக்கன் ப்யூசன் (Mutton chicken Fusion Recipe in Tamil)

# அசைவ உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் பிரியாணி:
- 2
சீரக சம்பா அரிசி ஐ முப்பது நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 3
சிக்கன் ஐ கழுவி சுத்தம் செய்து அலசி அதனுடன் தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 4
அடி கணமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும்
- 6
பின் நறுக்கிய புதினா இலை சேர்த்து வதக்கவும்
- 7
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 8
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 9
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 10
பின் ஊறவைத்த சிக்கன் ஐ சேர்த்து நன்கு வதக்கவும்
- 11
பின் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 12
பின் ஊறவைத்த அரிசியை கழுவி வடிகட்டி சேர்த்து கிளறவும்
- 13
அரிசி முக்கால் பாகம் வரை வெந்ததும் லெமன் சாறு விட்டு சுற்றிலும் நெய் விட்டு கொத்தமல்லி தழை புதினா இலை தூவி மூடி வைக்கவும்
- 14
பின் அதன் மேல் நெருப்பு துண்டுகள் ஐ பரவலாக போட்டு 10 நிமிடங்கள் வரை தம் போடவும்
- 15
பின் இறக்கி நன்கு கிளறவும்
- 16
தலக்கறி:
- 17
நறுக்கிய தலக்கறியில் சதை துண்டுகள் மற்றும் (எலும்பு நீக்கி விட்டு) எடுக்கவும்
- 18
தலக்கறி உடன் நறுக்கிய குடல் சேர்த்து நன்கு அலசி வைக்கவும்
- 19
பின் குக்கரில் தலக்கறி மற்றும் குடல் சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 8 விசில் வந்ததும் இறக்கவும்
- 20
ப்ரஷர் அடங்கியதும் திறந்து தண்ணீர் ஐ வடிகட்டி வைக்கவும் (வடிகட்டிய தண்ணீரை எலும்பு குழம்பில் சேர்த்து கொள்ளலாம்)
- 21
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 22
பின் கறிவேப்பிலை நறுக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 23
பின் வேகவைத்த தல மற்றும் குடல் கறியை சேர்த்து வதக்கவும்
- 24
பின் ரத்தத்தை கரைத்து சேர்த்து நன்கு கிளறவும்
- 25
நன்கு சுண்டி சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 26
வறுத்த கறி:
- 27
குக்கரில் சுத்தம் செய்து அலசி வைத்துள்ள மட்டன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்
- 28
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 29
பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 30
பின் தூள் வகைகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 31
பின் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்
- 32
பின் தண்ணீர் நன்கு சுண்டி திக்கானதும் மசாலா எல்லாமே மட்டனில் இறங்கி நன்கு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான வறுத்த கறி ரெடி
- 33
எலும்பு குழம்பு:
- 34
குக்கரில் எலும்பு கறியை கழுவி சுத்தம் செய்து போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 8 விசில் வந்ததும் இறக்கவும்
- 35
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பின் நைசாக அரைத்து எடுக்கவும்
- 36
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 37
பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த எலும்பை சேர்த்து வதக்கவும்
- 38
பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 39
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 40
லெக் பீஸ்:
- 41
லெக் பீஸ் ஐ சுத்தம் செய்து அலசி நான்கு புறமும் கீறி வைக்கவும்
- 42
பின் நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 43
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 44
பின் தூள் வகைகள் சேர்த்து சுத்தம் செய்து வைத்துள்ள லெக் பீஸ் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 45
பின் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
- 46
பின் அவ்வப்போது கிளறி விடவும்
- 47
இருபது நிமிடங்கள் வரை வேகவிட்டு தண்ணீர் எல்லாம் சுண்டி மசாலா உடன் லெக் பீஸ் சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 48
சிக்கன் கொத்து கறி கிரேவி:
- 49
சிக்கன் ஐ மிக்ஸியில் போட்டு கரகரப்பாக சுற்றி எடுக்கவும்
- 50
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 51
பின் சிக்கன் ஐ சேர்த்து உப்பு தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
- 52
பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 53
முந்திரி ஐ பத்து நிமிடங்கள் வரை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து பின் தேங்காய் துருவல் உடன் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 54
சிக்கன் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள முந்திரி தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 55
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி பட்டர் சேர்த்து இறக்கவும்
- 56
மூளை வறுவல்:
- 57
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் ஆட்டு மூளை ஐ சேர்த்து கிளறவும்
- 58
பின் இரண்டு கரண்டி கிரேவி ஐ ஊற்றி நன்கு கொதிக்க விட்டு சுண்டி வந்ததும் இறக்கவும்
- 59
இப்போது சுவையான மணமான மட்டன் சிக்கன் விருந்து ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
-
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
-
-
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
-
-
-
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
-
கமெண்ட்