கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#வெங்காயம்

கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)

#வெங்காயம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கிராம்சின்ன வெங்காயம்
  2. 5-6தக்காளி
  3. 10-15 பல்பூண்டு
  4. 5-6வர மிளகாய்
  5. சிறியபச்சை மிளகாய்-4-5
  6. ஒரு டீஸ்பூன்சீரகம்
  7. கடுகு
  8. கறிவேப்பிலை
  9. கொத்தமல்லி இலை
  10. தேவையான அளவுஎண்ணெய்
  11. தேவையான அளவுஉப்பு
  12. தேவையான பொருட்கள்குழிப்பணியாரம்/
  13. தேவையான அளவுஎண்ணெய்
  14. தோசை மாவுஇட்லி அல்லது
  15. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கிக்கொள்ளவும் அதனுடன் பூண்டு, மிளகாய், சீரகம் மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் தனியே எடுத்து வைக்கவும்.

  2. 2

    பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய தக்காளி சேர்த்து அதனை நன்றாக வதக்கி ஆறவைக்கவும். தக்காளி வதங்க சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். முதலில் வதக்கிய வெங்காய மிளகாய் கலவையை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின்பு ஆறிய தக்காளியை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

  4. 4

    முதலில் இட்லி அல்லது தோசை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் இலகுவாக கரைத்துக்கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் தேய்த்து மாவை குழிகளில் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி இரண்டு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

  5. 5

    அவ்வளவுதான் சுவையான கொல்லிமலை ஸ்பெஷல் சின்ன வெங்காய சட்னி குழி பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
அன்று

Similar Recipes