ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹாட் & ஸோர் சிக்கன் சூப் (hot and sour chicken soup recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 டேபிள் ஸ்பூன்பட்டர்
  2. 1 டீஸ்பூன்பூண்டு பொடியாக நறுக்கியது
  3. 2 லிட்டர்சிக்கன் ஸ்டாக்
  4. 1 கப்வேக வைத்து உதிர்த்த சிக்கன்
  5. 1சிக்கன் கியூப்
  6. தேவைக்குஉப்பு
  7. 1 கப்கேரட் நீளவாக்கில் நறுக்கியது
  8. 1 கப்கேப்ஸிகம் நீளவாக்கில் நறுக்கியது
  9. 1 கப்முட்டைக்கோஸ் நீளவாக்கில் நறுக்கியது -
  10. 1/4 கப்வினீகர்
  11. 2 டீஸ்பூன்பெப்பர் பொடித்தது
  12. 1 டீஸ்பூன்சைனீஸ் சால்ட்
  13. 2 டீஸ்பூன்சோயா சாஸ்
  14. 2 டேபிள் ஸ்பூன்கெட்ச் அப்
  15. 8 டேபிள் ஸ்பூன்சோள மாவு - (அரை கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.)
  16. 4 முட்டை உடையதுமுட்டை வெள்ளைக் கரு -

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.

  2. 2

    வெண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பூண்டு வதங்கியதும் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றவும்.

  4. 4

    இதில் வேக வைத்து உதிர்த்த சிக்கனை சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் இதில் சிக்கன் கியூபை சேர்க்கவும்.

  6. 6

    தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.

  7. 7

    இதில் நறுக்கிய கேரட், கேப்ஸிகம், முட்டைக்கோஸ் சேர்க்கவும்.

  8. 8

    பெப்பர் பொடித்ததும், சைனீஸ் சால்டும் சேர்த்து நன்றாக வேக விடவும்.

  9. 9

    எல்லாம் நன்றாக வெந்து கொதித்து வரும்போது சோயா சாஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  10. 10

    பின்னர் இதில் வினீகர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  11. 11

    பின்னர் கெட்ச் அப் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  12. 12

    கரைத்து வைத்திருக்கும் சோள மாவை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  13. 13

    சூப் நன்றாக கொதித்து குறுகி வரும் போது முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும்.

  14. 14

    கொதித்த உடன் அடுப்பை அணைத்து இறக்கவும்.

  15. 15

    ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான ஹாட் & ஸோர் சிக்கன் சூப் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes

More Recommended Recipes