எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. மூன்றுபெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 2தக்காளி
  5. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. ஒரு கொத்துகறிவேப்பிலை
  7. சிறிதுகொத்தமல்லி இலை
  8. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  9. ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்
  10. ஒன்றரை டீஸ்பூன்தனியா தூள்
  11. சிறிதுமிளகு தூள்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 2 குழிக்கரண்டிஎன்னை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கப்பில் உடைத்த முட்டை கறிவேப்பிலை பச்சைமிளகாய் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து மிளகுத்தூள் உப்பு கலந்து வைக்கவும்.

  2. 2

    முட்டை கலவையை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

  3. 3

    வெந்த முட்டையை வில்லைகளாக போடவும்.

  4. 4

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ஒரு பெரிய வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வதக்கி அரைக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தக்காளி வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பு கலந்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

  7. 7

    மசாலா பச்சை வாசனை போன பின் முட்டை துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை தூவி பரிமாறவும். எக் கரி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes