ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

பச்சை பயிரில் ப்ரோட்டின், ஃப்பைபர் சத்துக்கள் உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு குறையும். இரும்பு சத்து வளமாக உள்ளது. உடல் எடையை குறைக்கவும், சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். #chefdeena

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1கப்முளைக்கட்டிய பச்சை பயிர் / சாதா பச்சை பயிர் -
  2. 1 கை பிடிபச்சரிசி / இட்லி அரிசி -
  3. 2பச்சை மிளகாய்
  4. 1துண்டுஇஞ்சி
  5. 1கைப்பிடி அளவுகொத்தமல்லி
  6. சிறிதுகருவேப்பில்லை
  7. 1/4ஸ்பூன்பெருங்காயதூள்
  8. தேவைக்குஉப்பு
  9. சிறிதுஎண்ணை -
  10. 1வெங்காயம் - (பொடியாக நறுக்கியது)

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சை பயிறு மற்றும் அரிசியை சேர்த்து 6மணி நேரம் ஊற வைக்கவும். (உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசியை முற்றிலும் தவிர்க்க அரிசிக்கு பதிலாக கடலை பருப்பு 2 டே.ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்).

  2. 2

    பின்னர் ஊற வைத்த பயிருடன் இஞ்சி,பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பில்லை,பெருங்காயதூள், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்னர் தோசைக் கல்லில் மெல்லிய தோசை ஊற்றி (குழந்தைகளுக்கு நெய் சேர்ககலாம், மற்றவர்களுக்கு நல்லெண்ணை சேர்க்கலாம்) தோசையை இருபுறமும் திருப்பி போட்டு சுட்டு தோசையின் மேல் பொடியாக வெட்டிய வெங்காயத்தை தூவி எடுத்து தேங்காய் சட்டினியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

  4. 4

    இத்தோசையின் சத்தை அதிகப்படுத்த பயிரை முளைக்கட்டி பயன்படுத்தலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes