அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)

#goldenapron2
கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள்
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
#goldenapron2
கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
அடைபிரதமன் செய்ய:
- 2
கொதிக்கும் நீரில் அடையை போட்டு இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 3
பின் குளிர்ந்த நீரில் மூன்று முறை அலசி வைக்கவும்
- 4
குங்குமப்பூ உடன் சிறிது பால் சேர்த்து ஊறவிடவும்
- 5
அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 6
பால் கொதிக்கும் போது ஊறவைத்த அடையை போட்டு மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 7
அடை முக்கால் பாகம் வரை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 8
பின் அடை நன்கு வெந்ததும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் நெய் விட்டு முந்திரி திராட்சை மற்றும் சாரப்பருப்பை வறுத்து எடுக்கவும்
- 10
பின் ஊறவைத்த குங்குமப்பூ ஐ நன்கு கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
- 11
பின் வறுத்த முந்திரி திராட்சை சாரப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 12
பின் எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 13
சுவையான மணமான கேரளத்து அடை பிரதமன் ரெடி
- 14
பலாப்பழ சுழியன் செய்ய:
- 15
மேல் மாவு:
- 16
அரிசி மற்றும் உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 17
பின் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும் சிறிது உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 18
பூரணம் செய்ய:
- 19
கடலைப்பருப்பு ஐ வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 20
பின் ஊறவைத்த கடலைப்பருப்பு ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்
- 21
பருப்பு குழைய விடாமல் கைகளில் அழுத்தினால் நசுக்கினால் போதும்
- 22
பின் தண்ணீர் ஐ வடிகட்டி ஆறவிடவும்
- 23
பலாப்பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 24
பின் சிறிது தண்ணீர் விட்டு எட்டு நிமிடங்கள் வரை வேகவிட்டு வடிகட்டி ஆறவிடவும்
- 25
பின் கடலைப்பருப்பு மற்றும் பலாப்பழத்தை மிக்ஸியில் தனித்தனியாக சிறிது சிறிதாக போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுக்கவும்
- 26
பின் வாணலியில் பாதி அளவு நெய் விட்டு சூடானதும் அரைத்த விழுது ஐ சேர்த்து வதக்கவும்
- 27
பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
- 28
ஒரு கம்பி பதம் வந்ததும் வதக்கி வைத்துள்ள பருப்பு மற்றும் பலாப்பழ கலவையை சேர்த்து நன்கு கிளறவும்
- 29
முதலில் இளகி பின் சேர்ந்து வரும் போது நசுக்கிய ஏலக்காய் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 30
பின் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கெட்டியாக கிளறி இறக்கி நன்கு ஆறவிடவும்
- 31
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- 32
நன்கு ஆறவைத்த பருப்பு பலாப்பழ கலவையை நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 33
பின் ரெடியாக உள்ள மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்
- 34
பின் மெதுவாக திருப்பி விடவும்
- 35
இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 36
இந்த பூரணம் சாப்பிட பலாப்பழ சுவையுடன் மிகவும் நன்றாக இருக்கும்
- 37
இந்த பூரணத்தை பயன்படுத்தி கொழுக்கட்டை மற்றும் இலை அடை போன்ற உணவுகள் செய்யலாம்
- 38
சுவையான ஆரோக்கியமான அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
-
More Recipes
- இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- பாலக் சப்பாத்தி (palak chapathi Recipe in tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
கமெண்ட்