கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

மூன்று பேபேருக்
  1. 300 கிராம்சிக்கன்
  2. 2பச்சை மிளகாய்
  3. ஒரு ஸ்பூனமிளகாய் தூள்
  4. ஒரு கட்டுமல்லி இலை
  5. நாலு ஸ்பூன்வெண்ணை
  6. ஒரு ஸ்பூன்சிக்கன் மசாலா தூள்
  7. 5முந்திரி
  8. ஒரு ஸ்பூன்கசகசா
  9. தயிர்
  10. அரை ஸ்பூன்மஞ்சள் பொடி
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் இடித்த பச்சை மிளகாய் சிக்கன் மசாலா தூள் உப்பு தயிர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பொழுது மல்லி இலையை சுத்தம் செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி கசகசாவை ஊறவைத்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அது கரைந்து வரும்பொழுது மேக்னட் செய்து வைத்த சிக்கனை அதில் போட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு குறைந்த தீயில் மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.

  4. 4

    எப்பொழுது மல்லி இலை விழுது சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வேகவிடவும். பிறகு கசகசா முந்திரி விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து கிரேவி பதம் வரும் பொழுது இறக்கி பரிமாறவும் சுவையான கிரீமி க்ரீன் சிக்கன் ரெடி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதற்கும் சுவைப்பதற்கு மிக அருமையான என்னுடைய சிறந்த.ரெசிபிக்களில் ஒன்றாகவும் இந்த ரெசிபி உள்ளது குறிப்பு. மல்லிகை விழுதை முதலில் போட்டால் நிறமும் சுவையும் மாறி விடும் அதனால் கடைசியில் தான் சேர்க்க வேண்டும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes