தேங்காய் பால் சாதம் (thengai paal saatham recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

தேங்காய் பால் சாதம் (thengai paal saatham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு பரிமாறலாம்
  1. ஒன்றுதேங்காய்
  2. ஒன்று பெரிய வெங்காயம் -(பொடியாக நறுக்கியது)
  3. 1 1/2 கப்பாஸ்மதி அரிசி
  4. 10முந்திரி
  5. 2ஏலக்காய்
  6. 2கிராம்பு
  7. ஒரு கைப்பிடிபுதினா இலைகள்
  8. ஒரு கைப்பிடிகொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேங்காயைத் துருவி முதல் பால் எடுக்கவும் பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுக்கவும்

  2. 2

    முதலில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் இரண்டாக நறுக்கிய முந்திரி ஆகியவற்றை சேர்த்து முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும்

  3. 3

    பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து அதனுடன் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியவுடன் அதில் தேங்காய் பால் சேர்க்கவும் அதில் சிறிது கொதி வரும்போது முதல் தேங்காய்ப்பால் சேர்த்து பால் கொதிக்கும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும்

  5. 5

    ஒன்றரைக் கப் பாஸ்மதி அரிசிக்கு 3 கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்

  6. 6

    குக்கர் சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்

  7. 7

    விசில் சத்தம் முழுமையாக அடங்கிய பிறகு குக்கரை ஓபன் செய்து சாதத்தை மெதுவாக உடையாமல் கிளறவும் இப்பொழுது அருமையான ருசியான தேங்காய் பால் சாதம் தயார் இதனை உருளைக்கிழங்கு குருமா உடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்😋😋😋😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes