மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் தவா தம் மட்டன் பிரியாணி வித்தவுட் ஆயில் சிக்கன் 65 தால்சா ஆனியன் ரைத்தா

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து பேருக்கு
  1. அரை கிலோமட்டன்
  2. அரை கிலோசீரக சம்பா அரிசி
  3. ஒரு டம்ளர்தேங்காய் பால்
  4. 200 கிராம்நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம்
  5. 150 கிராம்பொடியாக நறுக்கியதக்காளி
  6. புதினா ஒரு கைப்பிடி மல்லி இலை ஒரு கைப்பிடி 4பச்சைமிளகாய் 5 சின்ன வெங்காயம் ஒரு ஸ்பூன் சோம்புஇவை அனைத்தையும் சேர்த்து அரைத்த விழுது
  7. ஒரு ஸ்பூனமிளகாய் தூள்
  8. பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை அன்னாசிப் விட்டு சோம்பு மிளகு சீரகம் கசகசா ஏலக்காய் இவற்றை லேசாக வறுத்து பொடித்த தூள் 4 ஸ்பூன்
  9. 50மில்லி50 மில்லிநெய் ஆயில்
  10. தேவையான அளவுஉப்பு
  11. வித்தவுட் ஆயில் சிக்கனுக்கு தேவையான பொருள்
  12. அரை கிலோசிக்கன்
  13. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  14. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  15. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  16. ஒரு ஸ்பூன்சிக்கன் மசாலா தூள்
  17. தேவையான அளவுஉப்பு
  18. அலங்கரிக்க ஆனியன் மல்லி இலை
  19. தேவையான பொருட்கள்தால் சாவிற்கு
  20. 50 கிராம் கடலைப்பருப்பு
  21. 50 கிராம் துவரம்பருப்பு
  22. கால் கிலோமட்டன்எலும்பு கறி
  23. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  24. 3கத்தரிக்காய்
  25. ஒன்றுமாங்காய்
  26. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  27. ஒரு ஸ்பூன் கறிமசாலா தூள்
  28. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  29. சிறிதுமல்லி இலை
  30. தேவைக்குஉப்பு
  31. 2பெல்லாரி வெங்காயம்நறுக்கியது
  32. அரை கப் கெட்டி தயிர்
  33. ஆனியன் ரைத்தா தேவையான பொருள்
  34. அரை ஸ்பூன் உப்பு
  35. ரெண்டு ஸ்பூன்பொடியாக நறுக்கிய மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அடிகனமான தவாவில் பாதி ஆயில் பாதி நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது உப்பு தக்காளி சேர்த்து வதக்கவும் பின் அரைத்து வைத்த மல்லி புதினா விழுதை சேர்த்து கறி மசாலாத்தூள் சேர்த்து சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கி பச்சை வாசனை போன பிறகு மூடிவைத்து கால் மணி நேரம் வேக வைக்கவும். பிறகு கழுவி வைத்த சீரகசம்பா அரிசியை அத்துடன் சேர்த்து கிளறி மூடி வைக்கவும். வேறு அடுப்பில் அந்தத் தண்ணீரை அநபிரியாணிக்கு தேவையான தண்ணீரை அளந்து நன்கு கொதிக்க வைக்கவும்.

  2. 2

    கொதித்த தண்ணீரை பிரியாணியுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும். இப்பொழுது ஓரளவு கெட்டியாக வந்திருக்கும். எப்பொழுது மீதமுள்ள நெய்யை ஊற்றிஒரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது நன்கு சூடானதும் அதன் மீது பிரியாணி சட்டியை வைத்து ஒரு மூடி போட்டு மூடி அதன்மேல் இரண்டு டம்ளர் சுடுநீர் ஊற்றி வெயிட்.வைக்கவும். 5நிமிடம் தம் மில் இருந்தபின் பிரியாணியை இறக்கி பத்து நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும். உதிரி உதிரியாக அடிப்பிடிக்காமல் அருமையான பிரியாணி ரெடி

  3. 3

    வித்தவுட் ஆயில் சிக்கன் செய்ய சிக்கனை கழுவி சுத்தம் செய்து அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சிக்கன் தூள் உப்பு தயிர் ஆகியவை சேர்த்து பிசைந்து வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பின் நறுக்கிய 2 தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மூடி வைக்கவும் அதிலிருந்து விடும் என்னை போன்ற திரவ திலேயே நன்கு வெந்து சுண்டி வரும் அப்பொழுது இரண்டு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு பிரட்டி வித்தவுட் ஆயில் சிக்கன் 65 ரெடி.

  4. 4

    தால்சா செய்ய ஒரு குக்கரில் பருப்பை கழுவி போட்டு அத்துடன் மஞ்சள் பொடி மட்டன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 விசில் விடவும். பிறகு அத்துடன்மிளகாய்த்தூள் கறி மசாலாத்தூள் கத்தரிக்காய் மாங்காய் உப்புஆகியவை சேர்த்து நன்கு வேக விட்டு தாளித்து இறக்க தால்சா ரெடி பிறகு மல்லி இலை தூவி பரிமாறவும்

  5. 5

    ஆனியன் ரைத்தா செய்ய ஆனியன் நீளவாக்கில் மிகப் பொடியாக நறுக்கி அத்துடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கெட்டியான தயிரை சேர்த்து மல்லி இலை தூவி பரிமாற ரைத்தாரெடி

  6. 6

    முட்டையை வேக வைத்து தோலுரித்து எடுத்து செய்து வைத்துள்ள அனைத்து ரெசிபி அனைத்தையும் ஒரு குழி தட்டில் வைத்து பரிமாற சூப்பரான மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல் விருந்து தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes