மட்டன்  சக்கோலி (mutton sakkoli recipe in tamil)

Malik Mohamed
Malik Mohamed @cook_19296041

சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book 

மட்டன்  சக்கோலி (mutton sakkoli recipe in tamil)

சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book 

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ வறுத்த அரிசி மாவு
  2. 600 மில்லி தண்ணீர்
  3. 1 கப்துருவிய தேங்காய்
  4. கறிவேப்பிலை
  5. உப்பு
  6. 2 கப்கெட்டியான மட்டன் கிரேவி மட்டன் உடன் சேர்த்து
  7. தேவையான பொருள்கள்மசாலா வுக்கு
  8. 1 முறி தேங்காய்
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/4 கப் சின்ன வெங்காயம்
  11. 2 காய்ந்த மிளகாய்
  12. 1டீஸ்பூன் கறுவா பட்டை
  13. 1டேபிள்ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    600 ml தண்ணீரை கொதிக்க விடவும்

  2. 2

    தண்ணீர் சூடாகும் போது தேவையான அளவு உப்பு,1 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  3. 3

    நன்றாக கொதித்ததும் 1/2 kg வறுத்த அரிசி மாவு சேர்த்து சிறு தீயில் வைத்து நன்றாக கிளறவும்

  4. 4

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி நன்றாக பிசையவும்

  5. 5

    சூடாக இருக்கும் போதே நன்றாக பிசையவும்

  6. 6

    நன்றாக பிசைந்த பிறகு மூன்று பகுதிகளாக பிரிக்கவும்

  7. 7

    ஒவ்வொரு பகுதி மாவையும் தனி தனியாக நன்றாக பிசையுங்கள்

  8. 8

    பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டவும் உருட்டி நடுவில் ஒரு அழுத்தம் கொடுக்கவும்.படத்தில் இருப்பது போல் எல்லா மாவையும் உருட்டவும்

  9. 9

    உருண்டைகளை ஆவியில் 20 நிமிஷம் வேக வைக்கவும்

  10. 10

    வேக வைத்த உருண்டைகளை ஆறவைக்கவும்

  11. 11

    1 முறி தேங்காய் துருவல்,1 டீஸ்பூன் கருவா பட்டை,1 டேபிள் ஸ்பூன் சோம்பு,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,2 காய்ந்த மிளகாய்,1/4 கப் சின்ன வெங்காயம் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பட்டு போல் அரைக்கவும்

  12. 12

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரைத்து வைத்த அரப்பை சேர்க்கவும்,அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து 1/2 டீஸ்பூன் உப்பு,2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து சூடாக்கவும்

  13. 13

    அரப்பு கொதித்து விட கூடாது சிறிது நுரை வந்ததும் வேக வைத்த அரிசிமாவு உருண்டைகளை சேர்க்கவும்

  14. 14

    நன்றாக கொதித்து கெட்டியாக வரும் போது கெட்டியான மட்டன் கிரேவி சேர்க்கவும்

  15. 15

    சுவைத்து பார்த்து விட்டு உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்

  16. 16

    நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு 30 நிமிடம் முடி வைக்கவும்

  17. 17

    30 நிமிடம் கழித்து பரிமாறவும்

  18. 18

    சுவையான மட்டன் சக்கோலி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Malik Mohamed
Malik Mohamed @cook_19296041
அன்று

Similar Recipes