இலகுவான  டோஸ்டர் கேக் (Quick Spongy Tea Time Cake Recipe in tamil)

Fma Ash
Fma Ash @cook_20061862

ஓவன் இல்லாமலேயே இலகுவாக குறைந்த நேரத்தில் நிறைய பேருக்கு செய்யலாம். பஞ்சு போன்ற சாப்டான கேக்கை, தேநீர் உடன் உண்டு மகிழுங்கள்.
#அவசர

இலகுவான  டோஸ்டர் கேக் (Quick Spongy Tea Time Cake Recipe in tamil)

ஓவன் இல்லாமலேயே இலகுவாக குறைந்த நேரத்தில் நிறைய பேருக்கு செய்யலாம். பஞ்சு போன்ற சாப்டான கேக்கை, தேநீர் உடன் உண்டு மகிழுங்கள்.
#அவசர

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
30 நபர்கள்
  1. தேவையானபொருட்கள்:
  2. 150 கிராம் சர்க்கரை
  3. 175 கிராம் பட்டர் (வெண்ணெய்)
  4. 2 முட்டை
  5. 175 கிராம் கோதுமை மாவு
  6. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 2டீஸ்பூன் பால் மாவு
  8. 1/4டீஸ்பூன் வெனிலா எஸ்சன்ஸ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் சலித்து வைத்துக் கொள்ளவும்.

    * சர்க்கரை மற்றும் பட்டரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்றாக கடையவும்.

    * பின்பு முட்டைகளையும் சேர்த்து கடையவும்.

  2. 2

    சலித்து வைத்த கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து மெதுவாக மிக்ஸ் செய்யவும்.
    (வேகமாக கடையக் கூடாது)

    * பின்னர் பால் மாவையும் வெனிலா எஸ்சன்ஸையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

  3. 3

    சான்விட்ச் மேக்கரை (டோஸ்ட்டர்) ஓன் செய்து, சிறிதளவு வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.

    * கேக் கலவையை சான்விட்ச் மேக்கரில் ஊற்றி, டோஸ்ட் செய்யவும்.

    * ஒரு பக்கம் டோஸ்ட்டானவுடன் மறுபக்கமும் கேக்கை மாற்றி, அதேபோல் டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    பஞ்சு போன்ற சாப்டான கேக்கை, தேநீர் உடன் உண்டு மகிழுங்கள்.

    * மேற்கூறிய அளவில் செய்தால், 30 கேக் கிடைக்கும். 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes