எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பரிமாறுவது
  1. வன்ஜிரம் மீன் - 1
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 3 மீடயம் சைஸ்
  4. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  5. கறிமசாலா - 3 மேஜைக்கரண்டி
  6. புளி - 1 எலுமிச்சை அளவு
  7. கொத்தமல்லி இலை - 1/2 கைப்பிடி
  8. மிளகாய் - 2
  9. கருவேப்பிலை - 1 காம்பு
  10. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  11. முருங்கை காய் - 1
  12. நல்லேண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மீன்னை சுத்தம் செய்து சிறிது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் வைக்கவும். முருங்கை காய் விரல் நீளத்திற்கு நறுக்கி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    வெங்காயத்தை நன்கு பொடியாகவும் தக்காளி ஜ 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் காயவிட்டு வெந்தயம் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வெங்காயம் லேசாக சிவக்கும் வரை வதக்கவும்.

  4. 4

    பின் மிளகாய்த்தூள் தக்காளி உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.

  5. 5

    தக்காளி வதங்கியதும் புளி கரைசல் கறிமசாலா கொத்தமல்லி மற்றும் மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  6. 6

    புளி வாடை அடங்கியதும் மீன் துண்டுகள் மற்றும் வேக வைத்த முருங்கை காய் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிடவும்.

  7. 7

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes