சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும், புளியை நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும், இன்னொரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் கடுகு வெந்தயம் மற்றும் வடகம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், என் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை இதனுடன் சேர்த்து கிளறிவிடவும்
- 3
பின் அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி ஒரு தட்டு போட்டு மூடி நன்கு கொதிக்க விட வேண்டும்
- 4
கொதிக்கும் நேரத்தில் மாங்காய் அதனுடன் சேர்க்க வேண்டும், சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை அதனுடன் சேர்க்க வேண்டும்
- 5
மீனை குழம்புடன் சேர்த்த பின் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். மிகவும் மெதுவாக கிளறி விட வேண்டும் இல்லை என்றால் மீன் உடைந்து விடும்
- 6
மீன் போட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடத்திற்குள் மீன் நன்கு வெந்துவிடும், பின் அதனுடன் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும், மீன் குழம்பு சுட சாதம் மற்றும் இட்லி தோசைக்கு ஏற்ற ஒரு காம்பினேஷன் சுவையான நாகர்கோவில் ஸ்டைல் மீன் குழம்பு தயார்
Similar Recipes
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
#vattaram #week5சிக்கன் சுக்கா மதுரையில் இருக்க ரோட்டு கடையில ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி Shailaja Selvaraj -
-
More Recipes
கமெண்ட்