நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் நீர் பூசணிக்காய் வத்தல்
  2. 1/4டீஸ்பூன் கடுகு
  3. 1 காய்ந்த மிளகாய்
  4. கருவேப்பிலை
  5. 1வெங்காயம்
  6. 1தக்காளி
  7. 10 பூண்டு
  8. 1.5டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 2டேபிள்ஸ்பூன் தனியாத்தூள்
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. புளி எலுமிச்சை அளவு
  13. 1/2 கப் தேங்காய் விழுது
  14. 1/2டீஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    நீர் பூசணிக்காய் வற்றலை எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்தூள்,தனியாத்தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    கரைத்து வைத்த புளி சேர்த்து கொதித்த உடன், அரைத்து வைத்த தேங்காய் விழுது மற்றும் வெள்ளம் சேர்த்து ஒரு கொதி விடவும். கடைசியாக வறுத்து வைத்த நீர் பூசணிக்காய் வற்றலை அதனுள் சேர்த்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes