அரிசி உசிலி/தயிர் பச்சடி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன் 3

அரிசி உசிலி/தயிர் பச்சடி

#கோல்டன் அப்ரோன் 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. பச்சரிசி 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/4 கப்
  3. வெள்ளை கொண்டை கடலை 1 கை பிடி
  4. தண்ணீர்
  5. உப்பு
  6. தாளிக்க
  7. ஆயில் 3 டீஸ்பூன்
  8. கடுகு 1 டீஸ்பூன்
  9. உளுந்து பருப்பு 2 டீஸ்பூன்
  10. கடலை பருப்பு 2 டீஸ்பூன்
  11. வரமிளகாய் 5
  12. முந்திரி 5
  13. கருவேப்பிலை
  14. பெருங்காயம்
  15. தயிர் பச்சடி செய்ய
  16. ஆயில் 2 டீஸ்பூன்
  17. தயிர் 1 கப்
  18. உப்பு
  19. தாளிக்க
  20. ஆயில் 2 டீஸ்பூன்
  21. கடுகு 1/2 டீஸ்பூன்
  22. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  23. உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்
  24. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  25. கருவேப்பிலை
  26. கொத்தமல்லி தழை
  27. பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    வெள்ளை கொண்டை கடலை 1 கை பிடி இரவு ஊறவிட்டு காலையில் கழுவி குக்கரில் 4 விசில் வேக விட்டு இறக்கவும். தண்ணீர் வடித்து விடவும். பாசிப்பாருப்பு 1/4 கப் எடுத்து வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும்.பச்சரிசி 1 கப் எடுத்து அதையும் வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும்.

  2. 2

    கடுகு 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.உளுந்து பருப்பு 2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். கடலை பருப்பு 2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.வர மிளகாய் 5 விதை நீக்கி கிள்ளி வைக்கவும்.முந்திரி 5 நறுக்கி வைக்கவும்.கருவேப்பிலை சிறிது கழுவி வைக்கவும். குக்கரில் ஆயில் 3 டீஸ்பூன் ஊற்றி கடுகு உளுந்து கடலை பருப்பு முந்திரி வெந்த கொண்டை கடலை வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து தண்ணீர் 3 கப் ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்த பச்சரிசி பாசிப்பருப்பை கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலக்கி விட்டு உப்பு சேர்க்கவும்.

  3. 3

    குக்கரை மூடிவிட்டு 4 முதல் 5 விசில் வேக விட்டு இறக்கவும்.20 நிமிடம் கழித்து குக்கரை திறந்தால் உசிலி ரெடி. காலை மற்றும் இரவு உணவாக இதை செய்து சாப்பிடலாம்.

  4. 4

    உசிலிக்கு சைடு டிஷ் ஆக சட்னி, தயிர் பச்சடி செய்யலாம்.தயிர் பச்சடிக்கு கெட்டிதயிர் 1 கப்,தயிரில் தேங்காய் துருவல் 2 டீஸ்பூன் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலை பருப்பு வரமிளகாய் பெருங்காயம் தாளித்து உப்பு கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கலக்கி வைக்கவும். சுவையான தயிர் பச்சடி ரெடி.

  5. 5

    உசிலிக்கு தயிர் பச்சடி சூப்பர் சைடு டிஷ்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes