ஸ்பைசி  ஸ்டப்புடு இட்லி

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#இட்லி #book
துவரம் பருப்பு கொண்டு செய்த கார இட்லி. மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஸ்பைசி  ஸ்டப்புடு இட்லி

#இட்லி #book
துவரம் பருப்பு கொண்டு செய்த கார இட்லி. மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பேர்
  1. துவரம் பருப்பு 100கிராம்
  2. வரமிளகாய்2
  3. பெருங்காய தூள் 1 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தாளிக்க
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன்
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம் பருப்பு வரமிளகாயை தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊற வைத்த பருப்புடன் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். மாவு 10நிமிடம் வெந்தபின் ஆறவிட்டு மிக்ஸியில் மீண்டும் ஒரு முறை ஓடவிட்டு உதிர் உதிராக உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.. கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    இட்லி தட்டில் எண்ண தடவி இட்லி மாவை கொஞ்சமாக ஊற்றவும். பருப்பு கலவையை அதன்மேல் பரவலாக வைக்கவும். மீண்டும் கொஞ்சம் இட்லி மாவை அதன் மேல் ஊற்றவும். மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேகவிடவும். வெந்த இட்லியை எடுத்து ஆறவைத்து ஸ்பூனில் எடுக்கவும்..பிறகு தட்டில் வைத்து பரிமாறவும்.தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes