வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் வரகரிசி
  2. 50 கிராம் உளுந்து
  3. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
  4. ஒரு பெரிய வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  7. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. அரை டீஸ்பூன் சோம்பு தூள்
  9. அரை டீஸ்பூன் சீரகத் தூள்
  10. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  11. ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  12. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  13. கடுகு தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணை தேவையான அளவு
  16. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வரகரிசி இட்லி செய்வதற்கு வரகு அரிசி மற்றும் உளுந்தம் பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வைக்க வேண்டும்.

  2. 2

    நான்கு மணி நேரம் பிறகு இட்லி பதத்திற்கு மாவை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதை கரைத்து நான்கு மணி நேரம் அப்படியே விடவும்.

  3. 3

    நான்கு மணி நேரம் கழித்து இதற்கான மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

  4. 4

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காயவிடவும். ஆயுள் காய்ந்த பிறகு அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு நன்கு பொரிய விடவும்.உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு நன்கு பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் மற்றும் பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.

  5. 5

    வெங்காயம் பொன்னிறமாக பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது அதில் மஞ்சள் தூள் சீரகத்தூள் சோம்புத்தூள் கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  6. 6

    இப்பொழுது மசாலா தயாராகிவிட்டது இறக்கும் பொழுது கொத்தமல்லியைத் தூவி வதக்கிக்கொள்ளவும். இந்த கலவையை ஆற விடவும் நன்கு ஆறிய பிறகு மாவில் கலந்து இட்லிகளாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

  7. 7

    இதனுடன் நீங்கள் இந்த சட்னி வேண்டுமானாலும் சாம்பார் வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம் இல்லை சைடு டிஷ் இல்லாமல் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes

More Recommended Recipes