சேமியா உப்புமா

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Lockdown 1
கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் .

சேமியா உப்புமா

#Lockdown 1
கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
2 பரிமாறுவது
  1. சேமியா 1 பாக்கெட்
  2. பெரிய வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. தக்காளி 1
  5. கேரட் 1
  6. உப்பு
  7. தண்ணீர்
  8. தாளிக்க
  9. ஆயில் 1 குழி கரண்டி
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  12. கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  13. பெருங்காயம் சிறிது
  14. கருவேப்பிலை
  15. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    சேமியா பாக்கெட் 1 வாங்கி சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 கழுவி நறுக்கி வைக்கவும்.தக்காளி 1 கழுவி நறுக்கி வைக்கவும்.கேரட் 1 தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். கருவேப்பிலை கழுவி வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் 1 குழி கரண்டி ஊற்றி கடுகு 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி,அதில் நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம்,தக்காளி, கேரட் கருவேப்பிலை சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் சேமியாவை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  3. 3

    நன்கு கிளறி தட்டு போட்டு மூடி வைக்கவும்.8 நிமிடம் கழித்து திறந்து கிளறி விடவும். தேவை என்றால் 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கிளறவும்.நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும்.சேமியா உப்புமா ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes