ஆனியன் பக்கோடா

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

ஆனியன் பக்கோடா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 400 கிராம் - பெரிய வெங்காயம்
  2. 3/4 கப் - கடலை மாவு
  3. 2 மேசைக்கரண்டி - அரிசி மாவு
  4. சிறு துண்டு - இஞ்சி
  5. 5 பல் - பூண்டு
  6. 2 - பச்சை மிளகாய்
  7. 2 ஆர்க்கு - கறிவேப்பிலை
  8. 2 மேசைக்கரண்டி - நறுக்கிய கொத்தமல்லி இலை
  9. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் பொடி
  10. 1 தேக்கரண்டி - மிளகாய்ப் பொடி
  11. 2 தேக்கரண்டி - தண்ணீர்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும்.

  2. 2

    இஞ்சி, பூண்டை உரலில் தட்டிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    கடலைமாவைப் பாதிப்பாதியாக நறுக்கிய வெங்காயக் கலவையின் மேல் தூவி நன்கு பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டியளவு தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவைக் கையால் உதிர்த்துப் பக்கோடாக்களாகப் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes