கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#கோல்டன் அப்ராண் 3 #book
வீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4பேர்
  1. அரிந்த காய்கறிகள் காய் கப் அளவிற்கு:
  2. ***************************************************
  3. உருளைக்கிழங்கு ஒரு கப்
  4. கேரட் ஒரு கப்
  5. காலிஃப்ளவர்1 கப்
  6. பீன்ஸ் 1கப்
  7. பச்சை பட்டாணி ஒரு கப்
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. பச்சை மிளகாய் 3
  10. ஒரு மூடி துருவிய தேங்காய்
  11. கருவேப்பிலை சிறிதளவு
  12. பட்டை சிறு துண்டு
  13. கிராம்பு ப 3
  14. ஏலக்காய் 2
  15. இஞ்சி ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காலிபிளவரை எடுத்து, தண்ணீரில் உப்புசேர்த்து, நன்றாகக் கழுவி வைத்துக் கொள்ளவும், மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.பிறகு நீளவாக்கில் அரிந்த வெங்காயம் சேர்க்கவும். அதன்பிறகு எல்லா காய்களையும் சேர்க்கவும்.பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு இஞ்சி சேர்க்கவும். கறிவேப்பிலையுடன் எல்லாவற்றையும் ஐந்து நிமிடம் வதக்கவும்.

  3. 3

    இதற்கிடையில் துருவிய தேங்காயை மிக்ஸியில் தண்ணீர்சேர்த்து, கெட்டிப்பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் ஒரு முறை அரைத்த தேங்காயை, தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஐந்து நிமிடம் காய்கறிகள் வழங்கிய பின்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு வேக விடவும். ஐந்து நிமிடம் வெந்த பின் இரண்டாவது தண்ணீர் சேர்த்து தேங்காய்ப் பாலை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வேக விடவும். காய்கறிகள் வெந்த பின்பு முதல் பாலை சேர்க்கவும். சுவையான வெஜ் ஸ்டூ ரெடி.

  5. 5

    சுவையான இந்த ஹோட்டல் ஸ்டைல் கேரள வெஜ் ஸ்டூ, ஆப்பதிற்க்கு தொட்டு கொள்ள மிக சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes