டூட்டி ப்ரூட்டி...

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#Book 13 (1)

# lockdown
Lockdown நேரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் கடை அடைப்பின் காரணமாக என் குழந்தைக்கு அவளை மகிழ் விக்கும் வகையில் வீட்டின் தோட்டிடத்தில் எளிமையாக கிடைக்கும் பப்பாளிக்காயை கொண்டு டூட்டி புரூட்டி செய்து கொடுத்து மகிழ்வித்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பப்பாளிக்காய் - 1
  2. சர்க்கரை - 2கப்
  3. உப்பு - 1சிட்டிகை
  4. வெண்ணிலா எசென்ஸ் - 1ஸ்பூன்
  5. ஃ புட் கலர் - விரும்பிய நிறங்கள் (லெமென் யெல்லோ, ஆரெஞ், சிவப்பு, பச்சை, மற்றும் வெள்ளை)

சமையல் குறிப்புகள்

  1. 1

    பப்பாளிக்காயை மேல் புற தோல் நீக்கி விட்டு அதன் உட்பகுதியில் உள்ள விதை மற்றும் நடுவில் இருக்கும் நார் போன்ற பகுதியை நீக்கி விட்டு பப்பாளிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக 3 முறை கழுவி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் ஒரு கடாயில் நறுக்கிய பப்பாளிக்காயை எடுத்துக் கொண்டு காய் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 5நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் அதே கடாயில் 2கப் சர்க்கரை (1 சிட்டிகை உப்பு)மற்றும் 3கப் தண்ணீர் எடுத்து சர்க்கரை நன்கு கரையும் வரை மிதமான தீயில் வைத்து கலக்கவும். சர்க்கரை நீரில் கரைந்த உடன் வேக வைத்த பப்பாளிக்காயை சர்க்கரை கரைசலில் சேர்த்து 20 லிருந்து 30 நிமிடம் அல்லது ஒரு சிறு கம்பி பதம் வரும் வரை வேக விடவும்.

  4. 4

    பின் அடுப்பை அனைத்து விட்டு பப்பாளிக்காயில் 1ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பின்னர் சக்கரை பாகில் வெந்த பப்பாளிக்காயை எத்தனை கலரில் வேண்டுமோ அத்தனை பகுதியாக பிரித்து வெவ்வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கலரை (food color)ஒவ்வொரு கிணத்தில் உள்ள பப்பாளி காயில் கலந்து 8மணி நேரம் ஊற விடவும். பின்னர் ஒரு தட்டில் டிசு பேப்பர் அல்லது காடடன் துணியின் மேல் டுட்டி புரூட்டி யை தூவி 10 மணி நேரம் உலர விட்டு எடுத்தால் கலர் புல் டூட்டி புரூட்டி ரெடி. (

  6. 6

    குறிப்பு : இயற்கை முறையில் நிறங்கள் சேர்க்க நினைத்தால் சிவப்பு நிறத்திற்கு பீட்ரூட்டை அரைத்து வடிகட்டி அதன் சாறை பப்பாளிக்காயில் கலந்து கொள்ளலாம். ஆரெஞ் நிறத்திற்கு கேரட் சாறையும், மஞ்சள் நிறத்திற்கு பச்சை மஞ்சள் சாறையும், நிறம் எதுவும் சேர்க்காமல் வெள்ளை நிறமும் பயன் படுத்தலாம் ).

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes