கம்மங்கூழ்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#lockdown
#book
இந்த லாக் டவுன் பீரியடில் அனைவரும் வீட்டில் இருப்பதால் ஒவ்வொரு வேலைக்கும் சமைக்கும் வேலை அதிகமாக உள்ளது. எனவே கம்மங்கூழ் போன்றவற்றை முதல் நாள் இரவே சமைத்து வைத்துவிட்டால் காலை உணவு செய்வது எளிதாகிறது .உடல்நலத்திற்கும் இந்த வெயில் நாளில் குளிர்ச்சியை தருகிறது அதனால் வாரம் இரண்டு முறை எங்கள் வீட்டில் கம்மங்கூழ் செய்கின்றேன். மேலும் இது என் சமையல் அறையில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். கூழ் என்றால் விலகி ஓடும் என் மகன் மற்றும் மகள் தற்பொழுது குடிக்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு
  1. கால் கிலோ கம்பு
  2. 200மில்லி தயிர்
  3. கருவேப்பிலை சிறிது
  4. உப்பு தேவைக்கு
  5. தொட்டுக்கொள்ள
  6. பொரித்த வடகம் சுண்டை வத்தல் மோர் மிளகாய் உரித்த சின்ன வெங்காயம் சுண்டைவற்றல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கம்பை சுத்தம் செய்து நன்கு கழுவி விட்டு நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு அதே தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கம்பை புளித்த மோர் அல்லது நீராகாரத்தில் கரைத்து நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  2. 2

    இப்பொழுது அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வரும் பொழுது அரைத்த கம்பை நன்றாக தண்ணீர்விட்டு கரைத்து கொதிக்கும் நீருடன் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

  3. 3

    நாம் செய்த இந்த கம்பம் கூறி மூடி வைத்துவிட்டு மறுநாள் காலையில் தேவையா அனைத்திலும் தண்ணீர் தயிர் சேர்த்து தேவையான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் பிறகு சின்ன வெங்காயம் கருவேப்பிலையை அத்துடன் நறுக்கி சேர்த்து கலந்து மண்பானையில் ஊற்றி வைக்க ஜில்லென்று குடிப்பதற்கு அருமையாக இருக்கும் இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல் வடகம் மோர் மிளகாய் வெங்காயம் போன்றவை அருமையாக இருக்கும். கரைத்து மண் பானையில் வைத்து விட்டால் ஜில்லென்று குடிப்பதற்கு தேவாமிர்தம் போல் இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes