சென்னா மசாலா 😍

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#immunity #book
பூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.
மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. ஒரு டம்ளர் வெள்ளை கொண்டைக்கடலை
  2. ரெண்டு பெரிய வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. ஒரு பச்சை மிளகாய்
  6. ஒரு ஸ்பூன் வர மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  8. அரை ஸ்பூன் சீரக தூள்
  9. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. 1 ஸ்பூன் சர்க்கரை
  12. ஒரு பட்டை, ஒரு ஏலக்காய்,ஒரு பிரின்ஜி இலை
  13. எண்ணெய் 3 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு டம்ளர் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்.மறுநாள் குக்கரில் கொண்டைக்கடலையை 5 சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ரெண்டு பெரிய வெங்காயத்தை அரிந்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். 4 தக்காளியை அரிந்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொண்டைக் கடலையில் 3 ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி,கொண்டைக்கடலை மூன்றையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடு செய்யவும். பிறகு ஒரு பட்டை ஒரு ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க விடவும். இதில் ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்.அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் ஒரு நிமிடம் வதக்கிய பின் தக்காளி விழுதை சேர்க்கவும். எல்லாம் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    மேற்கூறியவை நன்கு வதங்கிய பின் அதில் ஒரு ஸ்பூன் வரமிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கொத்தமல்லித்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு நிமிடம் ஒரு சேர கிளறவும். அதில் அரைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.

  4. 4

    தேவையான அளவு கொஞ்சமாக கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 2 அல்லது 3 நிமிடம் கொதிக்க விடவும். தேவை என்றால் மீண்டும் கொஞ்சமாக கடலை வேகவைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த கொண்டைக்கடலை கடைசியாக சேர்க்கவும். உங்கள் விருப்பத்திற்கு தகுந்தார்போல் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையை கடைசியாக சேர்க்கவும். பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை சேர்த்துக்கொள்ளவும். சுவையான சத்தான சென்னா மசாலா ரெடி. சோலா பூரி, சாதா பூரி, மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes