கோதுமை  ரவை பிரியாணி

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.
2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.
3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.
#immunity .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.) கேரட் -50கிராம்
  2. 2.) பீன்ஸ் - 50 கிராம்
  3. 3.) உருளை கிழங்கு - 50 கிராம்
  4. 4.) கொத்தமல்லி - தேவையான அளவு
  5. 5.) புதினா - தேவையான அளவு
  6. 6.) பட்டை, இலவங்கம், கிராம்பு,அன்னாச்சி பூ, நெய், உப்பு தேவையான அளவு
  7. 7.) குடமிளகாய் - 50 கிராம்
  8. 8.) கோதுமை ரவை - 1 கப்
  9. 9.) தண்ணீர் - 3 கப்
  10. 10.)பச்சை மிளகாய் - 4
  11. 11.) பல்லாரி வெங்காயம் -2
  12. 12.) இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கறிகள் அனைத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றி பட்டை, இலவங்கம், கிராம்பு அன்னாசி பூ சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் பல்லாரி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    பின்னர் காய்கறிகளை சேர்த்து 5. நிமிடம் வதக்கவும்.

  4. 4

    அதன்பின் 1 கப் கோதுமை ரவைக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்த மல்லி புதினா தழை தூவி குக்கரை மூடி வைக்கவும்.

  5. 5

    இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes