பீட்ரூட் வடை😋

#immunity #book
சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் துவரம்பருப்பு ஒரு கப் கடலைப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி இவற்றுடன் 4 வர மிளகாய் சேர்த்து சுமார் இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். 2 கப் பீட்ரூட் துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி விழுது ஒரு ஸ்பூன் தயார் செய்து கொள்ளவும்.நான்கு ஸ்பூன் அரிசி மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். நான்கு பச்சைமிளகாயை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
முதலில் இரண்டு மணி நேரம் ஊறிய பருப்பு வகைகளை, வரமிளகாய் உடன் சேர்த்து ஆட்டுக்கல்லு அல்லது கிரைண்டரில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைப்பதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு முழு பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றுடன் துருவிய பீட்ரூட், பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி, இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயத்தூள், அரிந்த பச்சை மிளகாய், தனியாக எடுத்து வைத்த முழு பருப்பையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
கலந்த வடை மாவில் நாலு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும். வாணலியில் வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய் வைத்துக் கொள்ளவும். மாவை உருண்டையாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இரண்டு மூன்று முறை சல்லி கரண்டியில் நன்கு திருப்பி விடவும் மிதமான தீயில் வேகவிட்டு கருகாமல் எண்ணெயை நன்கு வடித்துசிவக்க எடுக்கவும்.
- 4
இந்த பீட்ரூட் வடை, எண்ணெய் அதிகம் குடிக்காது. மாவை ரெடி செய்தவுடன் உடனே வடையை சுட்டு எடுக்கவும். சுவையான, மனமான, மொறுமொறுப்பான, வித்யாசமான, அனைவருக்கும் பிடித்தமான பீட்ரூட் வடை தயார். குழந்தைகளுக்கு வடையை சாஸுடன் கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
#steamஇது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன். Meena Ramesh -
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
பீட்ரூட் வடை
பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம். Lathamithra -
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். Stella Gnana Bell -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
பீட்ரூட் ரசம்
#மதியஉணவுகள்பீட்ரூட் பயன்படுத்தி செய்யலாம் ஆரோக்கியமான, சுவையான ரசம். இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைத்து பயன்படுத்துவதால் சத்தும் வீணாகாது. Sowmya Sundar -
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
மிக்ஸ தால் பிரை
#lockdown2 #bookஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும். Meena Ramesh -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
-
-
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa
கமெண்ட்