தேவையான பொருட்கள்

  1. 250கி மைதா
  2. 100கி வெண்ணெய்
  3. 2வெங்காயம்
  4. 2ஸ்பூன் எண்ணெய்
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  7. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2ஸ்பூன் கறி மசாலா தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. 3 வேக வைத்த முட்டை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவு உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து இரண்டாக பிரித்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    இரண்டு பங்கு மாவையும் லேசாக திரட்டி கொள்ளவும்

  3. 3

    ஒரு சப்பாத்தி மேல் சிறிது வெண்ணையை தேய்த்து மாவை தூவி அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மடித்து கொள்ளவும்

  4. 4

    மடித்து 1/2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்... பிறகு அதை வெளியே எடுத்து மீண்டும் தேய்த்து வெண்ணெய் தடவி மடித்து மீண்டும் 1/2 மணிநேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்

  5. 5

    மூன்றாவது முறை இதேபோல் செய்து பீரிசரில் 1/2 மணி நேரம் வைக்கவும்

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  7. 7

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  8. 8

    அத்துடன் மிளகாய் தூள், கறி மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.. சிறிது தண்ணீர் விட்டு கொதித்து தண்ணீர் வற்றியதும் ஆறவிடவும்

  9. 9

    பிரிஜ்ஜில் இருந்து மாவை எடுத்து சதுரமாக தேய்த்து கொள்ளவும்...அதை ஆறு பாகமாக வெட்டி கொள்ளவும்

  10. 10

    ஒரு பாகத்தை எடுத்து நடுவில் மசாலா அதன் மேல் முட்டை வைக்கவும்

  11. 11

    இரு முனையை மட்டும் சேர்த்து அதன் மேல் லேசாக பால் தடவவும்

  12. 12

    அடி கனமான கடாயில் ஒரு ஸ்டான்டு வைத்து அதன் மேல் பப்ஸ் தட்டை வைத்து மூடி 25 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்

  13. 13

    இப்போது சுவையான முட்டை பப்ஸ் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes