பன் பரோட்டா மற்றும் சால்னா

சமையல் குறிப்புகள்
- 1
பரோட்டா செய்யும் முறை: ஒரு பவுலில் மைதா மாவு எடுத்து கொண்டு இதில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
15 நிமிடம் கைகளால் அழுத்தம் கொடுத்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு இதன் மேல் சிறிதளவு எண்ணெய் விட்டு குறைந்தது 1 அல்லது 2 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.பிறகு இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து இதன் மேல் எண்ணெய் விட்டு மறுபடியும் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
பிறகு ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு அதன் மேல் நன்றாக எண்ணெய் தடவி ஒரு உருண்டையை இதன் மேல் வைத்து நன்கு கைகளால் பரப்பி இழுத்து விடவும்.பிறகு அதன் இரு ஓரங்களை மடித்து விட்டுகை விரல் வைத்து சுற்றி வைத்து கொள்ளவும்.
- 4
சுற்றி வைத்து லேசாக அதனை அழுத்தி வைத்து கொள்ளவும். எல்லா உருண்டைகளை இவ்வாறு சுற்றி வைக்கவும். பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் ஊற்றி அதன் மேல் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 5
பிறகு பரோட்டா சூடாக இருக்கும் போதே கைகளால் நன்கு அடித்துக் கொள்ளவும். சுவையான பன் பரோட்டா தயார்.
- 6
சால்னா செய்யும் முறை : தேங்காய் பேஸ்ட் செய்ய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுகடலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய் 1,பட்டை 1, கிராம்பு 2, சோம்பு 1 ஸ்பூன், கல்பாசி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 7
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கல்பாசி சேர்த்து தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி நன்கு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
- 8
இதில் மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 9
பிறகு அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். ஹோட்டல் சுவையில் பரோட்டா சால்னா தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்