சூரை மீன் புட்டு

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#nutrient1 #book

சூரை (tuna) மீனில் புரத சத்து அதிகமாக உள்ளது.100 gm மீனில் ஏறக்கொறைய 30gm புரத சத்து உள்ளது. மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,சிங்க் உள்ளது. சூரை மீன் பிடிக்காதவர்கள் கூட இப்படி புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
4 பரிமாறுவது
  1. சூரை மீன்(Tuna fish) -250கிராம்
  2. வெங்காயம் -2(நறுக்கியது)
  3. தேங்காய் துருவல் -1/2கப்
  4. இஞ்சி பூண்டு விழுது -1/2டீ ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் -1
  6. மஞ்சள் தூள் 1/4 டீ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் -1/2டீ ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் -1/2டீ ஸ்பூன்
  9. பெரு சீராக தூள் -1/2டீ ஸ்பூன்
  10. மிளகு தூள் -1/4டீ ஸ்பூன்
  11. கடுகு -1/2டீ ஸ்பூன்
  12. மல்லி தழை -1டே.ஸ்பூன்
  13. கருவேப்பிலை -1/2டே.ஸ்பூன்
  14. உப்பு -1 1/2 டீ ஸ்பூன்
  15. தேங்காய் எண்ணெய் -1டே.ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    சூரை மீனை மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.வெந்ததும் தோல் மற்றும் முள்ளை நீக்கவும். மீனை உதிர்த்தி வைத்து கொள்ளவும்.

  2. 2

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.

  3. 3

    எண்ணெய் சூடு ஆனதும் கடுகு சேர்க்கவும் கடுகு பொரிந்ததும்,கருவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  5. 5

    இப்போம் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,பெரு சீரக தூள் சேர்க்கவும்.

  6. 6

    கூடவே கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  7. 7

    பின் வேக வைத்து உதிர்த்தி வைத்த மீனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அத்துடன் உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  8. 8

    இப்போம் மிளகு தூள் சேர்த்து,பைனலாக மல்லி தழை,கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes