முளைக்கட்டிய தானிய சாலட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#goldenapron3 week15 sprouts

முளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1கப் பச்சை பயிறு
  2. 1/2கப் கொள்ளு
  3. 1/4கப் கருப்பு கொண்டைக் கடலை
  4. 1வெங்காயம்
  5. 1 வெள்ளரிக்காய்
  6. 2 பச்சை மிளகாய் அல்லது சிறிது மிளகு தூள்
  7. 1டேபிள்ஸ்பூன் சாட் மசாலா
  8. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. 1தக்காளி
  10. உப்பு சுவைக்கு ஏற்ப
  11. கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சைப் பயிறு, கொள்ளு, கருப்பு கொண்டைக்கடலை ஆகியவற்றை நன்கு கழுவிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 8மணி நேரம் ஊற விடவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் நீர் இல்லாமல் இரவு முழுவதும் கட்டி வைத்தால் பயிர்கள் அனைத்தும் முளை விட்டு இருக்கும்.

  2. 2

    முளைக்கட்டிய பயிர்களை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் வேக வைத்து எடுத்த பயிர்களுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் சேர்த்து கலந்துகொள்ளவும். பின்னர் பரிமாறுவதற்கு முன்னர் சாட் மசாலா, உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி ஆகியவற்றை கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes