ஹோட்டல் ஸ்டைல் மெது போண்டா😋

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#nutrient1
உளுத்தம் பருப்பு எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத் திறன் அதிகம் கிடைக்கும். புரோட்டீன் 14 கிராம் உள்ளது அதனால் புரதச்சத்து இதில் நிறைந்துள்ளது. இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகைக நோய்க்கு நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற இதர சத்துக்கள் உள்ளதால் எலும்பு வலிமை மூட்டுகளில் வலிமை
உண்டாகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு மிக நல்ல உணவு. ஆயுர்வேத குறிப்புகளில் கருப்பு உளுந்து சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக எழுதப்பட்டுள்ளது. நாள்பட்ட புண் காயங்கள் ஆற உதவுகிறது. இதயம், ரத்த நாளங்களில் வலிமை உண்டாக்குகிறது. பணி பளுவால் ஏற்படுகின்ற மன அழுத்தம், தூக்கமின்மை போக்குகிறது. நரம்பு மண்டலத்தை ஆசுவாசப்படுத்தி நரம்புகளை வலுவாக்குகிறது. இதனால்தான் நம் அன்றாட உணவு வகைகளில் மிக முக்கியமானதாக உளுத்தம்பருப்பு உள்ளது. 👍💪

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஊற வைக்க 1 ஹவர் சுட்டெடுக்க 20 மினிட்ஸ்
4 பேர்
  1. ஒரு டம்ளர் குண்டு உளுத்தம் பருப்பு
  2. ஒரு ஸ்பூன் பச்சரிசி
  3. ஒரு ஸ்பூன் மிளகு
  4. ஒரு ஸ்பூன் ரவை
  5. ஒரு பச்சை மிளகாய்
  6. கொஞ்சம் கறிவேப்பிலை
  7. ஒரு பக்தை இளம் தேங்காய்
  8. உப்பு தேவையான அளவு
  9. பொரித்த எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

ஊற வைக்க 1 ஹவர் சுட்டெடுக்க 20 மினிட்ஸ்
  1. 1

    முதலில் உளுந்தை ஒரு ஸ்பூன் அரிசி சேர்த்து நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் மீதி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். உளுந்து ஊற வேண்டிய மொத்த நேரம் ஒரு மணி நேரம். உளுந்து ஊறியவுடன் நன்கு வெண்ணை போல் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது.

  2. 2

    ஒரு ஸ்பூன் மிளகை ஒன்றிரண்டாக நுனுக்கி கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் ரவை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஸ்பூன் உப்பு இதற்குப் போதுமானது. கறிவேப்பிலையை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு பத்தை இளம் தேங்காயை பொடியாக அரிந்து கொள்ளவும்.

  3. 3

    மேற்கூறிய எல்லாவற்றையும் அரைத்த உளுந்து மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு போண்டா பொரிபதற்கான எண்ணையை வாணலியில் ஊற்றி எண்ணையை நன்கு சூடு படுத்தவும். எண்ணெய் சூடானவுடன் கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு மாவை எடுத்து உருட்டி எண்ணெயில் போடவும். ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து போண்டாவை திருப்பி போடவும்.

  4. 4

    இப்போது மிதமான தீயில் நன்கு வெந்து சிவக்கும் வரை சல்லி கரண்டியால் திருப்பி விட்டுக் கொண்டு இருக்கவும். பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும். சூடான, சுவையான, சத்து மிகுந்த, உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய, அனைவரும் விரும்பக்கூடிய உளுந்து போண்டா தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் நன்றாக இருக்கும். தயிரை தாளித்து அதில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes