சிக்கன் ஸ்டஃப் சமோசா பாக்ஸ் (Chicken stuff samosa box Recipe in Tamil)

Afra bena
Afra bena @cook_20327268

சிக்கன் ஸ்டஃப் சமோசா பாக்ஸ் (Chicken stuff samosa box Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் மைதா
  2. தேவைக்கேற்ப உப்பு
  3. 1டீஸ்பூன் ஓமம்
  4. தண்ணீர் (பிசைவதற்கு)
  5. எண்ணெய்
  6. 1/2கிலோ சிக்கன்
  7. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  9. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  10. 1/2டீஸ்பூன்மல்லித்தூள்
  11. 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
  12. 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 2வெங்காயம் (பொடியாக நறுக்கியது
  14. 2பச்சை மிளகாய்
  15. 1குடைமிளகாய்
  16. கொத்தமல்லிதழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பவுலில் மைதா மாவை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, ஓமம் சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்.

  2. 2

    சிக்கன் -ஐ சுத்தம் செய்து எடுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். பின் அரைத்த சிக்கன் கைமாவை சேர்த்து கிண்டவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

  4. 4

    மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சேர்த்து கிளறி விட்டு வேகவிடவும்.

  5. 5

    நன்றாக வெந்ததும் கொத்தமல்லிதழை மற்றும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். சிக்கன் ஸ்டஃப் தயார்.

  6. 6

    மாவை நன்றாக பிசைந்து எடுத்து சிறிதளவு உருண்டையாக எடுத்து சப்பாத்தி போலும் தேய்த்து அதனுல் சிக்கன் கலவையை வைத்து பெட்டி போல் மடித்து கத்தி வைத்து கீறி விட்டு மடித்து கொள்ளவும்.

  7. 7

    பின் அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான சிக்கன் ஸ்டஃப்டு சமோசா பாக்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes