எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 வாழைப்பழம்
  2. 3/4 கப் சர்க்கரை
  3. 1/2கப் வெண்ணெய்
  4. 1/4கப் காய்ச்சிய பால்
  5. 1 1/2கப் கோதுமை மாவு
  6. 1 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
  7. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. தேவையானஅளவு பாதாம்,உலர் திராட்சை, பேரிட்சைப்பழம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் கேக் செய்யும் பேனில் நெய் தடவி அதன் மேல் கோதுமை மாவு தூவி எல்லா பக்கத்திலும் படும் படி நன்றாக தேய்த்து விடவும். தேவையான நட்ஸ்களை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், சர்க்கரை, வெண்ணெய், பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    அடித்த கலவையை ஒரு பவுலில் சேர்த்து இதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    பிறகு இதில் சிறிதளவு நட்ஸ்களை சேர்த்து நன்கு கலந்து விட்டு கேக் பேனில் ஊற்றி அதனை நன்கு சமன் படுத்தி அதன் மேல் மீதமுள்ள நட்ஸ்களை வைத்து கொள்ளவும்.

  5. 5

    ஓவனை 8 அல்லது 10 நிமிடம் ப்ரீஹூட் செய்து வைக்கவும். பிறகு இந்த பேனை உள்ளே வைத்து 30 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும்.கேக் ஐ கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகி விட்டது. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes