ரோஹு மீன்  ஊறுகாய்

Belji Christo
Belji Christo @cook_20603733

மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பரிமாறுவது
  1. 1 கிலோ ரோஹு மீன்
  2. 50 கிராம் இஞ்சி
  3. 100 கிராம் பூண்டு
  4. 250 மில்லி நல்லெண்ணெய்
  5. 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 3 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  7. 1டீஸ்பூன் வெந்தயத்தூள்
  8. வினிகர்
  9. கறிவேப்பிலை தேவைக்கேற்ப
  10. உப்பு தேவையான அளவு
  11. மசாலா
  12. 1. மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
  13. 2. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  14. 3.மிளகு தூள் 1 டேபிள் ஸ்பூன்
  15. 4. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  16. 5.உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மீன் நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சின்ன துண்டு துண்டாக வெட்டி விட்டு மசாலா மிக்ஸ் பண்ணி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு,வெந்தயம் நன்கு வறுத்து எடுக்கவும். (இல்லன்னா சீக்கிரம் கெட்டு போகும்.)

  2. 2

    ஊற வைத்த மீன் துண்டு எண்ணெயில் போட்டு நன்கு பொரிக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் 100 மில்லி நல்லெண்ணெய் ஊத்தி அதில் இஞ்சி பூண்டு(அம்மியில் லேசாக அரைத்து) சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் கறிவேப்பிலை தேவைக்கேற்ப போட்டு நன்கு வதக்கவும். இந்த கலவையை பொரித்த மீனில் ஊத்தவும்.

  4. 4

    அதே கடாயில் மீதி இருக்கும் நல்லெண்ணெய் ஊத்தி அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் வெந்தய தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் மீன் கலவையை கலந்து 2 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    மீன் ஊறுகாய் தயார். ஆறிய பின் வினிகர் ஊத்தி பாக் பண்ணவும். 2 நாள் கழித்து சாப்பிடலாம். ஃப்ரிட்ஜ் ல வைக்கணும் னு இல்ல. றூம் டெம்பரேச்சர் ல 1 மாசம் கெட்டு போகாம இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Belji Christo
Belji Christo @cook_20603733
அன்று

Similar Recipes