கார பிஸ்கட் / ரொட்டி (Kaara biscuit Recipe in Tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

கார பிஸ்கட் / ரொட்டி (Kaara biscuit Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேருக்கு:
  1. 2-3 ஸ்பூன்சர்க்கரை: (பொடி செய்தது)
  2. 1 ஸ்பூன்தூள் உப்பு:
  3. 75 கிராம்வெண்ணை:
  4. 2 ஸ்பூன்தயிர்:
  5. 2கப்மைதா மாவு / கோதுமை மாவு:
  6. : 5-6பச்சை மிளகாய்
  7. சிறு கை அளவுகருவேப்பிலை:
  8. சிறு அளவுகொத்தமல்லி:

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெண்ணெயையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அடித்து வைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அடித்து வைத்து கொள்ள வேண்டும். (மிகவும் நைசாக அடிக்க கூடாது)

  3. 3

    மைதா மாவு மற்றும் உப்பு இரண்டையும் சலித்து வைத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பின் மைதா கலவையுடன் வெண்ணை, சர்க்கரை கலவையை சேர்க்க வேண்டும்.

  5. 5

    பின் அதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக அடிக்க வேண்டும். கலவை சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

  6. 6

    பின் அதனுடன் கருவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி கலவையை சேர்க்க வேண்டும்.

  7. 7

    கலவையை ஐந்து நிமிடத்திற்கு தனியாக வைக்க வேண்டும்.

  8. 8

    பின் மாவினை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களில் செய்து கொள்ளலாம்.

  9. 9

    மைக்ரோ அவனை 180 அளவிற்கு சூடு படுத்த வேண்டும்.

  10. 10

    அலுமினியம் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து அதான் மேல் மாவினை வைத்து அவனில் 20 முதல் 25 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  11. 11

    தற்போது சுவையான கார பிஸ்கட் ரெடி!

  12. 12

    பின் குறிப்பு: 1) மைக்ரோ அவன் இல்லாதவர்கள் எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்கலாம். 2) மாவை மைக்ரோ அவனில் வைப்பதற்கு முன் போர்க் ஸ்பூனால் சிறு ஓட்டைகள் இடலாம். மாவு உப்பி வராமல் இருக்கும்.

  13. 13

  14. 14

  15. 15

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

கமெண்ட்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
Thanks for sharing your wonderful recipe with us. Kindly visit our facebook page to know more about weekly contest... if u have any doubts regarding contest, kindly ask me at anytime.:)

Similar Recipes