மாம்பழ கப் கேக் (Maambala cup cake recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

மாம்பழ கப் கேக் (Maambala cup cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 220கிராம் மைதா
  2. 30கிராம் பால் பவுடர்
  3. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 110கிராம் மாம்பழ கூழ்
  6. 50மில்லி ப்ரஷ் க்ரீம்
  7. 1முட்டை
  8. 1/2கப் பட்டர்
  9. 3/4கப் பொடித்த சர்க்கரை
  10. 1ஸ்பூன் மாம்பழ எசென்ஸ்
  11. 2சிட்டிகை மஞ்சள் புட் கலர்
  12. 1/4கப் பால் தேவைப்பட்டால்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    மைதா உடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் பால் பவுடர் சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்

  2. 2

    பட்டர் உடன் சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்

  3. 3

    பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்து கொள்ளவும் பின் மாம்பழ கூழை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும் பின் மஞ்சள் புட் கலர் மற்றும் எசென்ஸ் ஐ சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்

  4. 4

    பின் ப்ரஷ் க்ரீம் ஐ தனியாக பீட் செய்து (பீட்டரை நிறுத்தி விட்டு மரகரண்டியால் கிளறவும்)இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு புறமாக திருப்பி கலக்கவும் பின் பாலை தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    பின் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக உள்ள கப் பேப்பரில் பாதிக்கு மற்றும் மாவை ஊற்றி நிரப்பவும்

  7. 7

    பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் வரை சூடாக்கிய அவனில் வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 25_30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes