காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250கிராம் கடலைமாவு
  2. 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  3. தேவைக்கேற்ப உப்பு
  4. 1சிட்டிகை பெருங்காயத்தூள்
  5. தேவையானஅளவு எண்ணெய் (பொரிப்பதற்கு)
  6. 1பூண்டு
  7. 1கப் வேர்க்கடலை
  8. கைப்பிடியளவு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு,பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காராபூந்தி கரண்டியால் மாவை ஊற்றி நன்றாக பொரிந்து வரும் பொழுது கிளறி மொறுமொறுவென பொரித்து எடுக்கவும்.

  3. 3

    பின் அதே எண்ணெயில் கைப்பிடியளவு கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பற்கள், வேர்க்கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.

  4. 4

    அவற்றை பொரித்து வைத்துள்ள காராபூந்தியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுவையான மொறுமொறுவென காராபூந்தி தயார்.

  5. 5

    குறிப்பு::மாவை பூந்திக்கு ஏற்ப பதமாக கரைத்து கொள்ள வேண்டும். தண்ணியாகவோ,கெட்டியாகவோ கரைக்க கூடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes