எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4காடை
  2. 1துண்டு பட்டை
  3. 3கிராம்பு
  4. 1/2 தேக்கரண்டி சோம்பு
  5. 3வெங்காயம் நறுக்கியது
  6. 2பச்சை மிளகாய்
  7. 2தக்காளி நறுக்கியது / சாறு
  8. 2தேக்கரண்டி இஞ்சிபூண்டு பேஸ்ட்
  9. 2மேஜைகரண்டி மிளகாய்தூள்
  10. 2மேஜைகரண்டி மல்லிதூள்
  11. 1/2தேக்கரண்டி மஞ்சள்தூள்
  12. உப்பு
  13. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வானலியில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து நன்கு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.

  3. 3

    அதில் காடை சேர்த்து மசாலாவுடன் நன்றாக பிரட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து விட்டு வானலியை மூடி வைக்கவும். 10 நிமிடத்தில் திரும்பவும் பிரட்டி விடவும். காடை நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். காடை நன்றாக வெந்ததும் சூடான சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes