நெல்லிக்காய் லாலிபாப் (Nellikaai lolipop recipe in tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

நெல்லிக்காய் லாலிபாப் (Nellikaai lolipop recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 -8 பரிமாறுவது
  1. 1டே.ஸ்பூன் நெல்லிக்காய் பொடி
  2. 150 கிராம் -நாட்டு சர்க்கரை
  3. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  4. 1/4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெல்லிக்காய் பொடி செய்ய நெல்லிக்காயை பொடிதாக அரிந்து வெயிலில் காய போடவும்.கொஞ்சம் ஈர பதம் இருக்கும் போது அதை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.பொடித்த பொடியை பிரிட்ஜ்யில் ஸ்டோர் செய்யவும்.ஆறு மாதம் வரை கெட்டு போகாது.

  2. 2

    நெல்லிக்காய் பொடியுடன் ஒரு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு 1/2 மணி நேரம் ஊற விடவும்.

  3. 3

    அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் பேன் வைத்த அதில் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்க்கவும்.

  4. 4

    நன்கு நொரைத்து வரும் போது ஊற வைத்த நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    ஜவ்வு பதம் வந்ததும் தேங்காய் எண்ணெய் தடவிய ப்ளட்டில் கொட்டவும்.

  6. 6

    மிதமான சூட்டில் இருக்கும் போது சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குச்சில் சொருகவும்.

  7. 7

    அருமையான இனிப்பு, புளிப்பு,துவர்ப்பு நிறைந்த நெல்லிக்காய் லாலிபாப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes