எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேருக்கு
  1. 1/2 டம்ளர் துவரம் பருப்பு
  2. 1/2 டம்ளர்கடலைப்பருப்பு
  3. 2பிரிஞ்சி இலை
  4. 1 துண்டு பட்டை
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 2 தக்காளி
  8. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  12. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  13. தாளிக்க
  14. 5 பல் பூண்டு
  15. 1 வர மிளகாய்
  16. 2 ஸ்பூன் நெய்
  17. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்
  18. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

  2. 2

    கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து சீரகம், பிரியாணி இலை,பட்டை சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  3. 3

    பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்குவதக்கவும்.

  4. 4

    எடுத்து வைத்துள்ள மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

  5. 5

    வேக வைத்துள்ள பருப்பில் வதக்கிய வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.

  6. 6

    அரை எலுமிச்சம்பழம் சாறு சேர்க்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு, ஒரு வரமிளகாய், கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தாளித்து ரெடியான கிரேவியில் சேர்க்கவும்.

  7. 7

    கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். தோசைக்கு மிகவும் நன்றாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes