சாம்பார் சாதம்

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. துவரம் பருப்பு 2 கிளாஸ்
  2. அரிசி 3 1/2 கிளாஸ்
  3. 2வெங்காயம்
  4. 2தக்காளி
  5. இஞ்சி பூண்டு விழுது 11 /2 ஸ்பூன்
  6. தனியாதூள் 1 ஸ்பூன்
  7. சீரகதூள் 1/2 ஸ்பூன்
  8. மிளகாய்தூள் 1 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
  10. மல்லிதழை
  11. புதினாஇலை
  12. 2பட்டை
  13. 3லவங்கம்
  14. 3ஏலக்காய்
  15. 1பிரியாணி இலை
  16. 3பச்சைமிளகாய்
  17. உப்பு
  18. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பருப்பில் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும், பிறகு வெங்காயம், தக்காளி, மல்லிதழை, புதினாஇலை, பச்சைமிளகாய் அனைத்தும் நறுக்கி கொள்ளவும், பிறகு அரிசியை களைந்து ஊறவைக்கவும், பிறகு ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், லவங்கம், சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை போடவும், வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு அதில் மல்லிதழை, தக்காளி, புதினாஇலை, சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும்,

  2. 2

    [அரிசியை களைவதற்கு முன் ஒரு கப்பில் அரிசியை அளந்து கொள்ளவும், ஒரு கப் அரிசி என்றால் இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்] பிறகு அதில் தனியாதூள், சீரகதூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும், தண்ணீர் கொதிவந்ததும் அரிசியை சேர்க்கவும், லைட்டாக கிளறி வேகவிடவும், முக்கால் பதம் வெந்ததும் அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து வேகவிடவும், பருப்பை சேர்த்ததும் தண்ணீர் வற்றியதும் தீயை முழுவதும் குறைத்து தம்மில் போடவும்,எல்லாம் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும், சுவையான சாம்பார் சாதம் தயார்....

  3. 3

    பருப்பை சேர்த்ததும் அடியில் புடிக்கும் அதிகம் கிளறி விட்டுக் கொள்ளவும்,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

Similar Recipes