தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 25 கிராம் புளி
  2. ஒரு சிறிய தக்காளி
  3. ஒன்றரை ஸ்பூன் மிளகு
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. ஒரு ஸ்பூன் மல்லி
  6. 2 வரமிளகாய்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. மஞ்சள் தூள் சிறிதளவு
  9. பெருங்காயம் அரை ஸ்பூன்
  10. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தேவைக்கேற்ப
  11. கடுகு உளுந்து வெந்தயம் சிறிதளவு
  12. வெல்லம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சீரகம் மிளகு கொத்தமல்லி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த பொருட்களை சேர்த்து தக்காளி, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த விழுதை விழுதை புளித் தண்ணீரை சேர்க்கவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். கறிவேப்பிலை வர மிளகாய் சேர்க்கவும். புளித்தண்ணீரை ஊற்றவும்

  5. 5

    ரசம் நன்கு நுரை கட்டி வரும்பொழுது சிறிது வெல்லம் சேர்க்கவும். மல்லி இலை சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான ரசம் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Archana R
Archana R @cook_20701604
அன்று

Similar Recipes