எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

55-1.10 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. பிரியாணி மாசாலா அரைக்க :
  2. 2டீஸ்பூன் மிளகு
  3. 1டீஸ்பூன் சீரகம்
  4. 1இஞ்சு பட்டை
  5. 4 லவக்கம்
  6. 3 ஏலக்காய்
  7. 1 நட்சதிர பட்டை
  8. ஜதிக்காய் கொஞ்சம்
  9. 1 ஜதிப்பதிரி
  10. பிரியாணி பொருள்
  11. 1/2கிலோ மட்டன்
  12. 1/2கிலோ சீரகசம்பா அரிசி (2கப்)
  13. 5 இடிச்ச பச்சை மிளகாய்
  14. 15 இடிச்ச பூண்டு
  15. 30 இடிச்ச சின்ன வெங்காயம்
  16. 1கைப்புடி கொத்தமல்லி புதினா
  17. 1இஞ்சு இஞ்சி
  18. 4டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  19. 4டேபிள்ஸ்பூன் நெய்
  20. 1/4கப் தயிர்
  21. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  22. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  23. உப்பு
  24. 1000மிலி தண்ணீர் (4கப்)

சமையல் குறிப்புகள்

55-1.10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் மட்டன் மஞ்சள்தூள் உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்... மற்றொரு வாணலியில் கொடுக்கப்பட்டுள்ள பிரியாணி மசாலாக்களை வெறும் வாணலியில் வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    படத்தில் காட்டியவாறு சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு புதினா கொத்தமல்லி இஞ்சி இவையனைத்தையும் தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிரியாணி சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும் பிரியாணி மசாலா நன்கு வதங்கிய பின் அதில் பச்சை மிளகாயும் பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை போன பின் அடுப்பை மிதமான தியில் வைத்து சின்ன வெங்காயம் விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    அதன்பின் புதினா கொத்தமல்லி இஞ்சி சேர்த்தால் மசாலாவை சேர்த்து கரும்பச்சை நிறம் மாறும் வரை வதக்கவும் அதன் பின் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து 2நிமிடம் நன்றாக வதக்கவும் பின்பு தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

  5. 5

    பிறகு நான்கு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும் அவ்வப்போது அடிப்பிடிக்காமல் கிளறி கொள்ளவும்

  6. 6

    இறுதியாக எலுமிச்சை சாறு நெய் கலந்து பிரியாணி சட்டியை மூடி காற்றுப் புகாதவாறு தட்டு வைத்து கனமான பொருளை அதன் மேலே வைக்கவும்... குறைந்த் தியில் 15நிமிடம் வைக்கவும்...

  7. 7

    பிறகு அடுப்பை அனைந்து 15நிமிடம் கழித்து மெதுவாக கிளறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes