🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#cookwithfriends #gravy #vijiPrem

இந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲

#cookwithfriends #gravy #vijiPrem

இந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3பேர்
  1. 1/2கிலோ மட்டன்
  2. 30 சின்னவெங்காயம் (அரைத்துக் கொள்ளவும்)
  3. 1 தக்காளி
  4. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1/2 கப் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி
  9. மசாலா அரைக்க
  10. 30 பூண்டுப்பல்
  11. 1இன்ச் இஞ்சி
  12. 1 இன்ச் பட்டை
  13. 3 லவங்கம்
  14. 2 டீஸ்பூன் மிளகு
  15. தனியாக அரைக்க
  16. 1/2 கப் தேங்காய் துருவல்
  17. சிறிதளவுபுதினா கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இஞ்சி பூண்டு பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும் அதனுடன் மிளகு சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும் சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.சின்னவெங்காயம் பச்சை வாசம் போக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி வதங்கியவுடன் மட்டனை சேர்த்து எண்ணெயில் நன்றாக 5 நிமிடம் மட்டனை வதக்கவும். மட்டன் வதக்கும் போதே தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,மற்றும் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும். அப்பொழுதுதான் கறியில் மசாலா பிடிக்கும்.

  4. 4

    தேங்காயை விழுதாக அரைத்துக் கொண்டு கடைசியாக சிறிது புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வதங்கிய மட்டனில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பாத்திரத்தில் என்றால் சிம்மில் வைத்து அரை மணி நேரம் வேகவிடவும். அல்லது குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.

  5. 5

    இறுதியாக சிறிது கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தேவைப்பட்டால் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மட்டன் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

கமெண்ட் (5)

Similar Recipes