தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. கோதுமை மாவு- 1/4 கிலோ
  2. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. பீட்ரூட் சாறு-1 கப்
  5. பெரிய வெங்காயம்-1
  6. பச்சை மிளகாய்-2
  7. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது
  8. பூண்டு-2 பல்
  9. தக்காளி-1
  10. உருளைக்கிழங்கு-2
  11. கடுகு சீரகம் கடலைப்பருப்பு சோம்பு- தலா 1 டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பீட்ரூட் சாறு சேர்த்து மாவை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.. தேவையெனில் தண்ணீர் சேர்த்து நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..

  2. 2

    மசால் செய்ய ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கடலைப்பருப்பு சீரகம் சோம்பு சேர்த்து நன்றாக பொரிந்ததும் அதில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் தக்காளி கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..5 நிமிடங்கள் வேகவிடவும்.இப்போது மசால் ரெடி.

  3. 3

    ஒரு கடாயில் பொரிக்க எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. சூடான சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் பூரி மசால் ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.கோவை பாசக்கார பெண்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes