எலுமிச்சை ரசம்🍋🍋

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#sambarrasam
கரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1மீடியம் சைஸ் தக்காளி
  2. 1இன்ச் அளவு இஞ்சி
  3. கறிவேப்பிலை இலை கொஞ்சம்
  4. 1பச்சை மிளகாய்
  5. 3டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி
  6. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 4கப் தண்ணீர் or தேவைக்கேற்ப
  8. 1கப் வேகவைத்த துவரம் பருப்பு
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. 1/2எலுமிச்சை பழம்
  11. தாளிக்க
  12. 1டேபிள்ஸ்பூன் நெய்
  13. 1டீஸ்பூன் கடுகு
  14. 1/2டீஸ்பூன் சீரகம்
  15. 1காய்ந்த மிளகாய்
  16. கொஞ்சம்கறிவேப்பிலை
  17. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  18. 1/2ஸ்பூன் மிளகு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    1தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.ஒரு இன்ச் அளவு இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு கொத்தமல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும். அரை ஸ்பூன் மிளகை ஒன்று இரண்டாக உடைத்து கொள்ளவும். தாளிக்கத் தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய எலுமிச்சம் பழம், அரை பழம் எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய வாணலியில் பொடியாக அரிந்த தக்காளி, பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை, இரண்டாக அரிந்த ஒரு பச்சை மிளகாய், பொடியாக அரிந்த இஞ்சி துண்டுகள், மஞ்சள்தூள்,மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். தக்காளி நன்கு வேகும் வரை வேக விடவும். தக்காளியை மசித்து கொள்ளவும். பிறகு அதில் குழைய வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  3. 3

    தண்ணீர் அளவு பார்த்து தேவையென்றால் மேலும் சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும். மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். பருப்பு சேர்த்தவுடன் அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். ரசம் கெட்டியாகிவிடும். 3 நிமிடம் போதும்.

  4. 4

    அதே சமயத்தில் ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு,1/2 ஸ்பூன் சீரகம்,1 கிள்ளிய வரமிளகாய்,கறிவேப்பிலை கொஞ்சம், 1/4 ஸ்பூன்பெருங்காயத் தூள் மற்றும் 1/2 ஸ்பூன்மிளகு தூள் சேர்த்து தாளிக்கவும். இவற்றை ரசத்தில் சேர்க்கவும். அடுப்பை நிறுத்தி விடவும்.இப்போது அரிந்து வைத்த பாதி எலுமிச்சை பழத்தை விதையை நீக்கிவிட்டு சாரை ரசத்தில் பிழிந்து விடவும். நன்கு கலந்து விடவும்.

  5. 5

    பரிமாறும் பாத்திரத்திற்கு ரசத்தை மாற்றி மூடி வைக்கவும். சுவையான எலுமிச்சை ரசம் தயார்.சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சூப் போலவும் தனியாக குடிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes