க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#cookwithfriends Dhanisha

க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்

#cookwithfriends Dhanisha

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. சிறிதளவுபன்னீர்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 5பூண்டு
  4. 1 கொத்து கறிவேப்பிலை
  5. 1 ஸ்பூன் நல்ல மிளகு தூள்
  6. 1 ஸ்பூன் மைதா
  7. 1 கப் பால்
  8. தேவைக்கு தண்ணீர்
  9. தேவைக்கு உப்பு
  10. 1 ஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    இது செய்வதற்கு முதலில் ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு பன்னீரை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு ஸ்பூன் மைதா மாவை தண்ணீர் விட்டு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்க்க வேண்டும் பின்பு அதில் சிறிதளவு நல்ல மிளகு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பூண்டு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    சிறிது வதங்கியதும் அதில் கரைத்து வைத்திருக்கும் மைதா மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

  4. 4

    கொதித்தவுடன் அதை வடிகட்டி எடுக்கவும்

  5. 5

    அதே பாத்திரத்தில் சிறிதளவு பால் சேர்த்து அதோடு வடிகட்டி வைத்திருக்கும் மைதா மாவு அதோடு கலந்து விடவேண்டும்.

  6. 6

    இப்பொழுது துருவி வைத்திருக்கும் பன்னீர் மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    சுவையான மற்றும் சத்தான க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Epsi beu @ magical kitchen
அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

Similar Recipes