பிட்டா பிரட்/ஷவர்மா பிரட்/ரொட்டி

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

பிட்டா பிரட்/ஷவர்மா பிரட்/ரொட்டி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 200 கிராம் மைதா
  2. 125மிலி மீதமான சூடு தண்ணீர்
  3. 1டீ.ஸ்பூன் ஈஸ்ட்
  4. 1டீ.ஸ்பூன் சீனி
  5. 1டே.ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    இப்போம் மிதமான சூடு தண்ணீரில் ஈஸ்ட் மற்றும் சீனி சேர்த்து கலந்து மூடி போட்டு ஒரு 15 நிமிடம் ஈஸ்ட் ஆக்ட்டிவேட் செய்ய வைக்கவும்.

  3. 3

    ஈஸ்ட் ஆக்ட்டிவேட் ஆனதும் மேலே நல்ல நுரைத்து இப்படி படத்தில் உள்ளது போல இருக்கும்.

  4. 4

    மைதா மாவுடன் ஆலிவ் ஆயில்,உப்பு,ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின் கவுண்டர்டாப்பில் மைதா தூவி ஒரு 10 நிமிடம் நல்ல பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து மேலே எண்ணெய் தடவி ஒரு டவல் போட்டு மூடி 1-1.30 மணி நேரம் மூடி வைக்கவும்.

  7. 7

    மாவு இப்போம் இரண்டு மடங்காக பொங்கி இருக்கும்.நடுவில் ஒரு குத்து குத்தவும்.

  8. 8

    இப்பொது கவுண்டர் டாப்பில் போட்டு நீள வாட்டில் உருட்டி தனி தனியாக பிரித்து கொள்ளவும்.

  9. 9

    ஒன்று ஒன்றாக எடுத்து உருட்டி கொள்ளவும்.
    மீதி மாவு உருண்டையை டவல் போட்டு மூடி வைக்கவும்(மாவு காய்ந்து போகாது).

  10. 10

    இப்பொது மைதா தூவி அதை திரட்டி கொள்ளவும்.ரொம்ப மெலிதாக இல்லாமல் கொஞ்சம் திக்காக திரட்டி கொள்ளவும்.

  11. 11

    தவாவில் போட்டு ஒரு பக்கம் பொங்கி வரும் போது மாத்தி போடவும்.

  12. 12

    பின் நல்ல உப்பி வரும் அப்போது நம்ம பிட்டா பிரட் தயார் ஆகிவிட்டது.

  13. 13

    அதை தவாவில் இருந்து எடுக்கவும். இந்த பிட்டா பிரட் உடன் என் தோழி #Vimala Christy செய்த ஷவர்மா ஃபீஸ்ட் பிளேட் உடன் சேர்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes